துரோகம் பண்றாங்க: செல்வராகவன் மீண்டும் பதிவு

சென்னை: இயக்குனர் செல்வராகவன் தற்போது நடிகராக தான் தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். குணச்சித்திர வேடங்கள் மட்டுமின்றி ஹீரோவாகவும் நடிக்கிறார்.செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவரின் போட்டோக்கள் அனைத்தையும் நீக்கிவிட்டார். அதனால் அவர்கள் விவாகரத்து செய்ய போகிறார்கள் என கடந்த சில தினங்களாக தகவல் பரவி வருகிறது.இந்நிலையில் செல்வரகவான் எக்ஸ் தளத்தில் போட்டிருக்கும் பதிவு வைரல் ஆகி இருக்கிறது.

‘‘திடீரென உங்களுக்கு அனைத்தும் தவறாய் போகும். சுற்றியுள்ளவர்கள் அனைவரும் துரோகம் செய்வது நன்றாய் தெரியும். நீயெல்லாம் கடவுளா? உனக்கு எவ்வளவு பூஜை செய்து வழிபட்டேன் என பிதற்றுவீர்கள். அப்போது அமைதியாய் இருங்கள். சில காலம்தான். பெரும் மலை பனியாய் போகும். அனைத்தும் சரியாகி விடும்’’.

இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், செல்வராகவன் குடும்பத்தில் என்னதான் நடக்கிறது என கேள்வி கேட்டு வருகிறார்கள். சில தினங்களுக்கு முன் செத்து பிழைத்து வந்தேன் என செல்வராகவன் ஒரு பதிவை சோஷியல் மீடியாவில் போட்டிருந்தார். இப்போது இதுபோல் பதிவிட்டு இருப்பதால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

Related Stories: