சென்னை: நடிகை சமந்தா கடந்த 1ம் தேதி இயக்குனர் ராஜ் நிடிமோரு என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் கணவருடன் மும்பையில் புதிய வீட்டில் குடியேறிய சமந்தா தற்போது ‘மா இன்டி பங்காரம்’ என்ற படத்தை தயாரித்து ஹிரோயினாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், திருமணத்திற்கு பிறகு தனது வாழ்க்கையை முற்றிலும் புதிய கோணத்தில் பார்க்க விரும்பும் சமந்தா 2026ம் ஆண்டில் சில விஷயங்களை கடைபிடிக்க தீர்மானம் எடுத்துள்ளார். நன்றியுணர்வு, ஆயுள் நீட்டிப்பு, அமைதியான மனதுடன் தெளிவான எண்ணங்களுடன், நிலையான வளர்ச்சியுடன் 2026ம் ஆண்டை வரவேற்க தயாராகி வருவதாக தனது சோசியல் மீடியா பதிவில் சமந்தா பதிவிட்டுள்ளார். சமந்தாவின் இந்த பதிவு கவனத்தை ஈர்த்து வருகிறது.
