- யமி க ut தம்
- ஆதித்ய தர்
- ரன்வீர் சிங்
- சாரா அர்ஜுன்
- அக்ஷய் கன்னா
- மாதவன்
- சஞ்சய் தத்
- அர்ஜுன் ராம்பால்
- இந்தியா
நடிகை யாமி கவுதம் கணவர் ஆதித்யா தர் இந்தியில் இயக்கிய ‘துராந்தர்’ என்ற படத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜூன் ஜோடியுடன் அக்ஷய் கன்னா, மாதவன், சஞ்சய் தத், அர்ஜூன் ராம்பால் நடித்திருந்தனர். கடந்த 5ம் தேதி திரைக்கு வந்த இப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று, 10 நாட்களில் 552.70 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்தது.
இந்தியாவில் 430.20 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தை தெலுங்கில் வெளியிட வேண்டும் என்று சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து தெலுங்கு டப்பிங் பணிகள் வேகமாக நடந்தது. நாளை மறுநாள் (19ம் தேதி) ‘துராந்தர்’ தெலுங்கு பதிப்பு வெளியாகிறது.
