‘பாலிவுட் பாட்ஷா’ என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் முன்னணி நடிகரும், தயாரிப்பாளருமான ஷாருக்கான், கடந்த 2023ல் இந்தியில் ‘பதான்’, ‘ஜவான்’ ஆகிய படங்களில் நடித்தார். இப்படங்கள் மிகப்பெரிய வெற்றிபெற்றன. 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தன. ‘டன்கி’ என்ற படம் மட்டும் சுமாரான வரவேற்பு பெற்றது. தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ‘கிங்’ என்ற படத்தில், மீண்டும் தீபிகா படுகோனுடன் இணைந்து நடித்து வரும் ஷாருக்கான், தனது மகள் சஹானா கானை முக்கிய கேரக்டரில் அறிமுகம் செய்கிறார்.
இந்நிலையில், ஷாருக்கானின் சொகுசு கேரவன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர் வைத்திருக்கும் அந்த வேனில் கிச்சன், வார்ட்ரோப், மேக்கப் ரூம், தனி கழிப்பறை, எலெக்ட்ரிக் சேர் உள்பட பல்வேறு வசதிகள் இருக்கிறது. இந்த ஆடம்பர கேரவனின் விலை 4 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. ஷாருக்கான் விசேஷமாக பயன்படுத்தி வரும் அந்த கேரவனின் போட்டோக்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
