×

என்னை வணங்குற ரசிகர்கள் வேண்டாம்: சிவகார்த்திகேயன் கறார்

 

சென்னை: ரசிகர்களை தங்களது நடிகர்களுடன் இணைக்கும் ஃபேன்லி என்டர்டெயின்மென்ட் மொபைல் ஆப் விழாவில் சிவகார்த்திகேயன் பேசியது:
இந்த மேடையில் இருப்பவர்களை ஒப்பிடும்போது எனக்குத்தான் கொஞ்சம் மூளை கம்மி என நினைக்கிறேன். அதனால்தான் நடிக்க முடிகிறது. மூளை ரொம்ப ஜாஸ்தியா இருந்தா நான் இயக்குனர்களையெல்லாம் டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சிருவேன்னு நினைக்கிறேன். அதனால அவங்க சொல்றத கேட்டு நடிக்கிற ஆளா இருக்கறதுக்கு மூளை கொஞ்சம் கம்மியா இருக்கிறதே நல்லதுதான்.

நான் எப்பவுமே என்னுடைய ஃபேன்ஸை என் பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்னு சொல்லுவேன். ஏன்னா அவங்கள ஒரு ஃபேமிலியா பார்க்கிறேன். என் ஃபேன்ஸ் டிஸ்ட்ராக்ட் ஆகிடக் கூடாது, வேற எதோ அவங்க மைண்டுக்குள்ள திணிச்சிடக் கூடாதுங்கிறதை யோசிப்பேன். எனக்கு எப்படிப்பட்ட ஃபேன்ஸ் இருக்கணும்னு ஆசைப்படுறேன்னா, என்னை வணங்குற ரசிகர்கள் வேண்டாம். அவங்க வணங்க வேண்டியது கடவுளையும் அவங்க அப்பா அம்மாவையும் தான். என் கூட பிரெண்ட்லியா பேசுற, இல்ல ஒரு அண்ணன் தம்பி மாதிரி இருக்கிற ரசிகர்கள் தான் இருக்கணும்னு நான் ஆசைப்படுறேன்.

ஏன்னா இன்னைக்கு சோசியல் மீடியால, நிறைய நெகட்டிவிட்டிதான் பரப்புறாங்க. என்னமோ ஒண்ணு, பொய்யாவாது சொல்லுவோம் அதுக்கு தான் நிறைய ட்ராக்ஷன் இருக்குன்னு நினைக்கிறாங்க. ஆனால், எங்களுக்கு தகவல்கள் ஆத்தென்டிக்கா இருக்கணும். பாசிட்டிவான என்கேஜ்மென்ட் இருக்கணும்னு நினைக்கிறது ஒரு சூப்பரான சிந்தனை. இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார். ஃபேன்லி செயலியின் இணை நிறுவனர்கள் சரவணன் கனகராஜு, னிவாசன் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Sivakarthikeyan ,Chennai ,Fanly Entertainment ,
× RELATED ஏஐ மூலம் ஆபாசம் ராஷ்மிகா ஆவேசம்