
கடந்த 1ம் தேதி சமந்தாவும், இயக்குனர் ராஜ் நிடிமோருவும் திடீரென்று திருமணம் செய்துகொண்டனர். இது அவர்கள் இருவருக்குமே 2வது காதல் திருமணமாகும். நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் கோவை ஈஷா யோகா மையத்தில் அவர்களது திருமணம் நடந்தது. இதையடுத்து அவர்களுக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவிந்தது. தனது திருமண போட்டோக்களை சமந்தா சோஷியல் மீடியாவில் பதிவிட்ட சில மணி நேரங்களில், முன்னாள் ஒப்பனைக்கலைஞர் சாதனா சிங் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு பதிவு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
முன்பு சமந்தாவின் நெருங்கிய தோழியாகவும், நீண்ட கால ஒப்பனைக்கலைஞராகவும் இருந்தவர் சாதனா சிங். அவர் தனது பதிவில் மறைமுகமாக, ‘வில்லன்’ என்று சித்தரித்து இருந்தார். இப்பதிவை வெளியிட்ட சாதனா சிங்கை சமந்தாவின் ரசிகர்களும், நெட்டிசன்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால், தன்னை விமர்சித்தவர்களின் பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து, அதையும் பதிவிட்டு வருகிறார் சாதனா சிங்.

