- எஸ்.எஸ். லலித் குமார்
- ஏழு திரை ஸ்டுடியோ
- விக்ரம் பிரபு
- எல்.கே. அக்ஷய் குமார்
- அனந்த
- சுரேஷ் ராஜகுமாரி
- கிறிஸ்துமஸ் நாள்
- வேலூர்
- ஜஸ்டின் பிரபா கரன்
சென்னை: செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரித்துள்ள படம், ‘சிறை’. இதில் விக்ரம் பிரபு, எல்.கே.அக்ஷய் குமார், அனந்தா நடித்துள்ளனர். சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார். உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம், வரும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் அன்று திரைக்கு வருகிறது. இப்படத்தில் இடம்பெறும் ‘மன்னிச்சிரு’ என்ற பர்ஸ்ட் சிங்கிள் ரிலீசானது. வேலூரில் படமான இப்பாடல் காட்சியில் விக்ரம் பிரபு, அனந்தா இணைந்து நடித்தனர். ஜஸ்டின் பிரபாகரன் எழுதி இசை அமைத்த இப்பாடலை சத்ய பிரகாஷ், ஆனந்தி ஜோஷி பாடியிருக்கின்றனர்.

