×

காந்தாரா தெய்வத்தை கிண்டல் செய்த ரன்வீர் சிங் மீது போலீசில் புகார்: துளு மக்கள் போர்க்கொடி மன்னிப்பு கேட்டார்

 

பனாஜி: கோவாவில் நடந்த 56வது சர்வதேச திரைப்பட விழாவின் கடைசி நாளில் கலந்துகொண்ட பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், ‘காந்தாரா’ படத்தின் இயக்குனரும், ஹீரோவுமான ரிஷப் ஷெட்டியுடன் மேடையில் உரையாடினார். அப்போது படத்தின் கிளைமாக்ஸை பாராட்டிய ரன்வீர் சிங், அதில் வரும் தெய்வத்தை ‘பெண் பேய்’ என்று வர்ணித்ததுடன், அந்த தெய்வத்தை போல் முகபாவனைகளை வெளியிட்டு கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. துளு மக்களால் குலதெய்வமாக வணங்கப்படும் சாமுண்டி தெய்வத்தை அவர் இவ்வாறு சித்தரித்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி, ரன்வீர் சிங் மீது இந்து ஜனஜாக்ருதி சமிதி அமைப்பினர் பனாஜி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், ‘புனிதமான தெய்வத்தை பேய் என்று சொன்னதன் மூலம், கோடிக்கணக்கான மக்களின் மத உணர்வுகளை ரன்வீர் சிங் காயப்படுத்தியுள்ளார். எனவே, அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ரன்வீர் சிங் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருக்க, திரைப்பட விழாவில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரன்வீர் சிங் தனது செயலுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

Tags : Ranveer Singh ,Goddess ,Gandhara ,Bollywood ,56th International Film Festival ,Goa ,Rishabh Shetty ,Chamundi ,
× RELATED ஏஐ மூலம் ஆபாசம் ராஷ்மிகா ஆவேசம்