1983ல் இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்றது. இந்த தொடரை பின்னணியாகக் கொண்டு தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் உருவாகும் படம் 83. கபீர் கான் இயக்குகிறார். இதில் கபில் தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். இதற்காக கபில்தேவ் போல, ஹேர் ஸ்டைல், மீசை என அவரது லுக்கிற்கு மாறியுள்ளார் ரன்வீர் சிங்.
அதன் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. படத்தில் ரன்வீரின் மனைவியாகவே நடிக்கிறார் தீபிகா படுகோன். தமிழக கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடிக்கிறார். படத்தின் பயிற்சி முகாம் மட்டுமே 4 மாதங்கள் நடந்துள்ளது. படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டது.
