ரித்விகா சினிமாவுக்கு முழுக்கா?

‘பரதேசி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான ரித்விகா, ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து ‘ஒரு நாள் கூத்து’, ‘கபாலி’, ‘இருமுகன்’, ‘ஓநாய்கள் ஜாக்கிரதை’, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’, ‘தீபாவளி போனஸ்’, ‘லெவன்’, ‘டிஎன்ஏ’ உள்பட பல படங்களில் நடித்து, யதார்த்தமாக நடிக்கக்கூடிய நடிகை என்று பாராட்டு பெற்றார். தற்போது பல படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வரும் அவர், மற்ற நடிகைகளுக்கும் டப்பிங் பேசுகிறார். இந்நிலையில், சமீபத்தில் ரித்விகாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

திருச்சியை சேர்ந்த ஐடி ஊழியர் வினோத் லக்‌ஷ்மன் என்பவரை ரித்விகா திருமணம் செய்கிறார். இது இருவீட்டு பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாகும். சமீபத்தில் நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இருவீட்டாரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டனர். திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படுகிறது. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து ரித்விகா சினிமாவில் நடிப்பார், டப்பிங் பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: