இந்நிலையில், தெலுங்கில் ‘அல்லூரி’ என்ற படத்தில் விஷ்ணு ஜோடியாக நடித்தார். தற்போது நானி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் ‘தி பாரடைஸ்’ என்ற படத்தில் கயாடு லோஹர் நடித்து வருகிறார். இப்படத்தில் மிகவும் அழுத்தமான கேரக்டரில், அதாவது பாலியல் தொழிலாளி வேடத்தில் அவர் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2022ல் ‘பத்தொன்பதாம் நூற்றாண்டு’ என்ற மலையாள படத்தில், நங்கேலி என்ற வித்தியாசமான கேரக்டரில் நடித்து பாராட்டுகளை பெற்ற அவருக்கு ‘தி பாரடைஸ்’ என்ற படம் திருப்புமுனையாக அமையும் என்று கூறப்படுகிறது.
