அதாவது, தன்னை திருமணம் செய்துகொள்ள விரும்பும் நபர் வீட்டோடு மாப்பிள்ளையாக வர வேண்டும் என்பது தான் அந்த கண்டிஷன் என்றும் அனுஸ்ரீ கூறியுள்ளார். அதற்கான காரணத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். அதில், ‘‘34 வருடங்களாக பத்தனம்திட்டாவில் வசித்து வரும் வீட்டை விட்டு வேறு இடத்திற்கு மாற எனக்கு விருப்பம் இல்லை. எனவே, வீட்டோடு மருமகனாக வர நினைப்பவர்களை திருமணம் செய்ய விரும்புகிறேன். அதற்காக மேட்ரிமோனியில் பதிவு செய்ய உள்ளேன்’’ என்றும் திருமணம் குறித்த செய்தியை அனுஸ்ரீ உறுதிப்படுத்தியுள்ளார்.
