ஆட்டோவில் பயணித்த சிம்ரன்

திருமணத்துக்குப் பிறகு சில படங்களில் கெஸ்ட் ரோல் அல்லது சிறுவேடத்தில் நடித்து வந்த சிம்ரன், தற்போது தமிழ்ப் படவுலகில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். பிரசாந்துடன் ‘அந்தகன்’, ஆதியுடன் ‘சப்தம்’ ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார். அஜித் குமாருடன் ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தில் கேமியோ ரோலிலும், சசிகுமார் மனைவியாக ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற படத்திலும் நடித்திருந்த சிம்ரன், தற்போது நிறைய கதைகள் கேட்டு வருகிறார். அதோடு, சொந்தப் படம் தயாரிக்கவும், ஒரு திரைப்படத்தை எழுதி இயக்கவும் ஆயத்தமாகி வருகிறார்.

அவரது கணவர் தீபக் பஹாவை ஹீரோவாக நடிக்க வைக்க வாய்ப்பு கேட்டு வருகிறார் என்ற தகவல் உண்மை இல்லை. இந்நிலையில், சென்னையில் ஆட்டோவில் பயணித்த வீடியோவைப் பதிவிட்டுள்ள சிம்ரன், தன்னுடன் நடிகையும், நடனக்கலைஞருமான ஆனந்தியையும் அழைத்துச் சென்றுள்ளார். மேலும், ‘இறுகப் பிடித்துக்கொள்ளுங்கள். சென்னை ஆட்டோ ஸ்டைலாகவும், வேகமாகவும் வருகிறது’ என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: