×

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் கூலி படத்தில் மோனிகா பாடல் வெளியானது

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்திலிருந்து ‘மோனிகா’ பாடல் வெளியானது. சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் ‘கூலி’. ரஜினிகாந்த், ஆமிர் கான், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா உள்பட பலர் நடிக்கிறார்கள். சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். லோகேஷ் கனகராஜ் எழுதி, இயக்குகிறார். ‘எந்திரன்’, ‘பேட்ட’, ‘அண்ணாத்த’, ‘ஜெயிலர்’ படங்களின் மாபெரும் வெற்றிகளுக்கு பிறகு ரஜினிகாந்த் – சன் பிக்சர்ஸ் மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளது. இதனால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்புகள் நிலவுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை வரும் ஆகஸ்ட் 14ம் தேதி உலகம் முழுவதும் திரையிட உள்ளனர். படத்தின் முதல் பாடலாக ‘சிக்கிடு’ பாடல் கடந்த ஜூன் 25ம் தேதி வெளியாகி, பெரும் ஹிட்டானது. இந்த பாடல் ஏற்கனவே டிரெண்டிங்கில் இருக்கும் நிலையில் ‘கூலி’ படத்தின் அடுத்த பாடலாக ‘மோனிகா’ என்ற பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த பாடல் நேற்று மாலை இணையத்தில் வெளியானது. இதில் நடிகை பூஜா ஹெக்டே நடனமாடியுள்ளார். அனிருத் இசையில் உருவான இந்த பாடலும் வைரலாகி வருகிறது. படம் வெளியாக, இன்னும் ஒரே மாதம் இருக்கும் நிலையில் படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி வருவதால், ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

Tags : Rajinikanth ,Sun Pictures ,Chennai ,Aamir Khan ,Shruti Haasan ,Nagarjuna ,Sathyaraj ,Upendra ,Sun TV Network… ,
× RELATED டியர் ரதி பிரச்னையில் சிக்கும் டேட்டிங் ஜோடி