ஹீரோயின் அழுததால் எனக்கும் கண்ணீர் வந்தது: மிர்ச்சி சிவா உருக்கம்

சென்னை: ஜியோ ஹாட்ஸ்டார், ஜிகேஎஸ் புரொடக்‌ஷன், செவன் சீஸ் அன்ட் செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்த படம், ‘பறந்து போ’. ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, மிதுல் ரயான், அஞ்சலி, அஜூ வர்கீஸ் நடித்தனர். இப்படத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் ஹாட்ஸ்டார் பிரதீப், இசை அமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, எடிட்டர் மதி, பாடலாசிரியர் மதன் கார்க்கி கலந்துகொண்டனர். அப்போது ராம் பேசுகையில், ‘சினிமா என்பது கணிக்க முடியாத ஒரு கேம்.

சமகால தலைமுறையினருடன் இப்படத்தின் மூலம் தொடர்புகொள்ள முடிந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். பல குழந்தைகளை என் வீட்டுக்கு அழைத்து வந்து, அவர்களின் தனி உலகத்தை எனக்கு அறிமுகப்படுத்திய எனது மகன் மற்றும் எனது மனைவி, மகளுக்கு நன்றி’ என்றார். பிறகு மிர்ச்சி சிவா பேசும்போது, ‘திருநெல்வேலி, மதுரை, சேலம் உள்பட பல ஊர்களுக்கு தியேட்டர் விசிட் சென்று வந்தோம். கிரேஸ் ஆண்டனி கண் கலங்கியதை பார்த்து எனக்கும் கண்ணீர் வந்தது’ என்றார்.

Related Stories: