விஜய் சேதுபதியுடன் இணைந்த சம்யுக்தா

தெலுங்கு படவுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான புரி ஜெகன்நாத், முதல்முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றும் பான் இந்தியா படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. பிரமாண்டமான முறையில் உருவாகும் இப்படத்தை புரி கனெக்ட்ஸ் சார்பில் புரி ஜெகன்நாத், ஜேபி மோஷன் பிக்சர்ஸ் சார்பில் நாராயண ராவ் இணைந்து தயாரிக்கின்றனர். நடிகை சார்மி கவுர் வழங்குகிறார். தெலுங்கு திரையுலகின் ‘லக்கி சார்ம்’ என்று சொல்லப்படும் சம்யுக்தா மேனன் ஹீரோயினாக நடிக்கிறார். முக்கிய வேடங்களில் தபு, விஜய் குமார் நடிக்கின்றனர்.

இப்படத்துக்காக ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான அரங்கில் விஜய் சேதுபதி, சம்யுக்தா மேனன் ஆகியோருடன் இதர நடிகர், நடிகைகள் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. விஜய் சேதுபதியை புதிய அவதாரத்தில் காட்ட, இப்படத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் அதிக கவனம் செலுத்தும் புரி ஜெகன்நாத், இப்படத்தை கண்டிப்பாக வெற்றிப்படமாக அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

Related Stories: