ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு தந்தையாக மாதவன்

ஐதராபாத்: ராஜமவுலி இயக்கும் படத்தில் மகேஷ் பாபுவுக்கு தந்தையாக மாதவன் நடிக்கிறார். மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் நடிக்கும் படத்தை ராஜமவுலி இயக்கி வருகிறார். 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளில் படம் உருவாகிறது. இதில் முக்கிய வேடத்தில் நடிக்க மாதவன் தேர்வாகியுள்ளார். அவருக்கு வில்லன் வேடம் தரப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. அதே சமயம், படத்தில் மகேஷ் பாபுவின் தந்தையாக வித்தியாசமான கெட்டப்பில் அவர் தோன்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஹாலிவுட் பாணியில் ஆக்‌ஷன் அட்வெஞ்சர் படமாக இது உருவாக உள்ளது.

Related Stories: