40 வயது ஹீரோவுக்கு 20 வயது சாரா ஜோடி!

தீபிகா படுகோன் கணவர் ரன்வீர் சிங்கிற்கு நேற்று பிறந்தநாள். இதையொட்டி இந்தி ‘துரந்தர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. ஜியோ ஸ்டுடியோஸ், பி 62 ஸ்டுடியோஸ் தயாரிக்கும் திரில்லர் படமான இதை ஆதித்யா தர் எழுதி இயக்குகிறார். தமிழில் அல்லு சிரிஷுடன் ‘கௌரவம்’, ஜெய்யுடன் ‘தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்’ ஆகிய படங்களில் நடித்துள்ள யாமி கவுதமின் கணவர்தான் ஆதித்யா தர். ‘துரந்தர்’ படத்தில் ரன்வீர் சிங், சஞ்சய் தத், அக்‌ஷய் கன்னா, மாதவன், அர்ஜூன் ராம்பால் நடிக்கின்றனர். சாஸ்வத் சச்தேவ் இசை அமைக்கிறார். ஜோதி தேஷ்பாண்டே, லோகேஷ் தர் தயாரிக்கின்றனர். தெரியாத மனிதர்களை பற்றிய, சொல்லப்படாத கதையை விவரிக்கும் இப்படத்தில், பாகிஸ்தானுக்கு ரகசியமாக சென்று சாகசங்களில் ஈடுபடும் உளவாளியாக ரன்வீர் சிங் நடிக்கிறார்.

40 வயதான அவரது ஜோடியாக 20 வயதான (முன்னாள் குழந்தை நட்சத்திரம்) சாரா நடிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2011ல் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ‘தெய்வத்திருமகள்’ படத்தில் விக்ரம் மகளாக, நிலா என்ற கேரக்டரில் நடித்து கவனத்தை ஈர்த்தவர் சாரா அர்ஜூன். மீண்டும் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ‘சைவம்’ படத்திலும், மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இளம் வயது ஐஸ்வர்யா ராய் வேடத்திலும் நடித்திருந்தார். பிரியாமணி, சன்னி லியோன், ஜாக்கி ஷெராஃப் நடிப்பில் இன்னும் திரைக்கு வராத ‘கொட்டேஷன் கேங்’ படத்தில், போதைக்கு அடிமையாக சாரா அர்ஜூன் நடித்துள்ளார்.

Related Stories: