- சென்னை
- எஸ். ஹரி உத்ரா
- உத்ரா புரொடக்ஷன்ஸ்
- மேலும் 4 தயாரிப்புகள்
- கதிரவன்
- சாந்தினி கவுர்
- மாயா கலாம்மி
- நந்தகுமார்
- என்.கே.ஆர்
- கௌசல்யா நவரத்தினம்
சென்னை: எஸ்.ஹரி உத்ராவின் உத்ரா புரொடக்ஷன்ஸ், மோர் 4 புரொடக்ஷன் இணைந்து தயாரிக்க, மலேசியாவைச் சேர்ந்த கதிரவென் எழுதி இயக்கி ஹீரோவாக நடித்துள்ள படம், ‘கண்நீரா’. சாந்தினி கவுர், மாயா கிளம்மி, நந்தகுமார் என்கேஆர் நடித்துள்ளனர். கவுசல்யா நவரத்தினம் கதை எழுதி, இணை இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். ஏ.கணேஷ் நாயர் ஒளிப்பதிவு செய்ய, ஹரிமாறன் இசை அமைத்துள்ளார். கௌசல்யா.என் பாடல்கள் எழுதியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, கே.ராஜன், ரோபோ சங்கர் கலந்துகொண்டனர்.
அப்போது கதிரவென் பேசியதாவது: மலேசியாவில் படப்பிடிப்பு நடந்தது. என் மனைவி கவுசல்யா நவரத்தினம் கதை எழுதி, இணை இயக்குனராகப் பணியாற்றினார். முதலில் அவர் இயக்குவதாக இருந்தது. அப்போது திடீரென்று அவர் கர்ப்பமானார். எனவேதான் நான் இயக்கினேன். ஆனால், ‘கண்நீரா’ படத்தின் 2ம் பாகத்தை கவுசல்யா நவரத்தினம் இயக்கி முடித்துள்ளார். 2 பாகங்களுமே வித்தியாசமான காதல் கதையுடன் உருவாகியுள்ளது. 3ம் பாகத்தை உருவாக்கும் எண்ணம் இல்லை. தொடர்ந்து தமிழில் படங்கள் இயக்கி நடிக்க நானும், என் மனைவியும் திட்டமிட்டுள்ளோம்.