சென்னை: மலையாள நடிகை ஹனி ரோஸ் (33), தமிழில் ‘முதல் கனவே’, ‘சிங்கம் புலி’, ‘மல்லுக்கட்டு’, ‘காந்தர்வன்’, ‘பட்டாம் பூச்சி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக ‘வீரசிம்ஹா’ என்ற படத்தில் நடித்ததற்காக, அங்கு ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் ஹனி ரோஸை தங்களது கடை திறப்பு விழாக்களுக்கு சில தொழிலதிபர்கள் அழைத்து வருகின்றனர். இதுபோல் அவர் கடை திறப்பு விழாக்களுக்கு செல்லும்போது, அவரைப் பார்ப்பதற்கும், அவருடன் சேர்ந்து செல்ஃபி எடுப் பதற்கும் ரசிகர்கள் கட்டுக்கடங்காமல் கூடுகின்றனர். அப்போது கூட்டத்தினரைக் கட்டுப்படுத்துவதற்காக போலீசார் தடியடி நடத்திய சம்பவங்கள் நடந்துள்ளன. இந்நிலையில், கேரளதொழிலதிபர் ஒருவர், ஹனி ரோசுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. இது
குறித்து ஹனி ரோஸ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், பரபரப்பான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது: கேரளாவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர், என்னைப் பின்தொடர்ந்து வந்து பாலியல் தொல்லை கொடுக்கிறார். என் உடல் அமைப்பு குறித்து குறிப்பிட்டு, மிகவும் அசிங்கமான வார்த்தைகள் பேசுகிறார். அவரது இன்ஸ்டாகிராமில் என்னைப் பற்றி தவறான மற்றும் அவதூறு கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
அதைப் படித்துவிட்டு சிலர், ‘அவரது பதிவுக்கு நீங்கள் எந்த விளக்கமும் கொடுக்கவில்லையே. அதை நீங்கள் ரசிக்கிறீர்களா?’ என்று கேட்கின்றனர். எனவே, இதற்கு மேலும் இந்த விஷயத்தில் பொறுமையாக இருக்க வேண்டாம் என்பதற்காகவே இந்தப் பதிவை நான் வெளியிட்டு இருக்கிறேன். தன்னிடம் அதிக பணம் இருக்கும் திமிரில் அவர் இப்படி நடந்துகொள்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் மட்டுமல்ல, இதுபோன்ற செயல்களை யாருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவருடன் இணைந்து மேலும் 2 பேர் இதுபோன்ற அவ தூறு பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இதன்மூலம் அவர்கள், என்னை பலவீனமானவர் என்று நினைத்துவிட வேண்டாம். பணம் இருக்கிறது என்ற ஆணவத்தில் எந்தவொரு பெண்ணையும் இதுபோல் யாரும் இழிவுபடுத்தக்கூடாது. இவ்வாறு ஹனி ரோஸ் புகார் கூறியுள்ளார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, ‘சம்பந்தப்பட்ட நபர், பின்னால் இருந்து என்னைப் பார்த்து, என் அங்க அசைவுகளைக் குறிப்பிட்டு அருவெறுக்கத்தக்க வகையில் பேசினார். தொடர்ந்து அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை நிறுத்தவில்லை என்றால், அவர் மீது சட்டப் படி நடவடிக்கை எடுப்பேன்’ என்றார். ஹனி ரோஸின் பின்னழகை வர்ணித்து தொழிலதிபர் பாலி யல் தொல்லையில் ஈடுபட்ட இச்சம்பவம், திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.