×
Saravana Stores

காதலருடன் டிசம்பர் 11ல் திருமணம் மதம் மாறுகிறார் கீர்த்தி சுரேஷ்?

சென்னை: காதலரை வரும் டிசம்பரில் திருமணம் செய்வதால் நடிகை கீர்த்தி சுரேஷ் மதம் மாற உள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் பரவியுள்ளது. கேரளாவை சேர்ந்த கீர்த்தி சுரேஷ், ‘இது என்ன மாயம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்தார். இப்போது ‘பேபி ஜான்’ என்ற இந்தி படத்திலும் நடித்திருக்கிறார். இவர் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஆண்டனியை காதலித்து வந்தார். இவர்கள் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து கோவாவில் வரும் டிசம்பர் 11ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதில் நெருங்கிய உறவினர்கள், திரையுலகை சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் இந்து மதத்திலிருந்து கீர்த்தி சுரேஷ், கிறிஸ்தவ மதத்துக்கு மாறி ஆண்டனியை திருமணம் செய்ய உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இது குறித்து கீர்த்தி சுரேஷ் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் தரப்படவில்லை. ஏற்கனவே பிரபு தேவாவை காதலித்தபோது, நயன்தாரா, கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறியது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த காதல் தோல்வியில் முடிந்தது. அதன் பிறகே அவர் விக்னேஷ் சிவனை காதலித்து மணந்தார்.

Tags : Keerthy Suresh ,Chennai ,Kerala ,
× RELATED கீர்த்தி சுரேஷா இது?.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி