×

6 படங்களுடன் ஓய்வு பெறுகிறார் ஆமிர்கான்

மும்பை: சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது ஓய்வு குறித்து அறிவித்துள்ளார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமிர் கான். ‘லால் சிங் சத்தா படத்துக்கு முன்பே நான் திரைத் துறையிலிருந்து விலக முடிவு செய்தேன். ஆனால் என்னுடைய குழந்தைகள் வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். 18 வயது முதல் இன்று வரை என்னுடைய முழு இளமை பருவம் உள்ளிட்ட அனைத்தையும் சினிமாவில் கவனம் செலுத்துவதிலேயே கடந்துவிட்டேன். இதனால் குடும்பம், குழந்தைகளுடன் நேரத்தை செலவிட முடியவில்லை. கொரோனா நேரத்தில் தான் வாழ்வின் பெரும்பகுதியை சினிமாவுக்கே அர்பணித்து, குடும்பத்தை கவனிக்கவில்லை என்ற பெரும் குற்ற உணர்வு என்னை ஆட்கொண்டுவிட்டது. கடந்த 35 ஆண்டுகளில் தேவையான படங்களில் நடித்துவிட்டேன். இனி என் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க வேண்டும். நல்லவேளையாக இதை 57 வயதிலேயே உணர்ந்துவிட்டேன். இந்த 10 வருடங்கள் என்னுடைய சினிமா வாழ்க்கையின் இறுதி ஆண்டுகளாக இருக்கும். 6 படங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளேன். இந்த காலக்கட்டத்தில் சிறந்த இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், எழுத்தாளர்களுடன் பயணிக்க விரும்புகிறேன்’ என தெரிவித்துள்ளார். ஆமிர் கானின் ஓய்வு முடிவை கேட்டு அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Aamir Khan ,Mumbai ,Bollywood ,Lal Singh Chadha ,
× RELATED ஆக்ஸிஜன் அளவு குறைந்து மயங்கிய நடிகை: வெளிநாட்டில் நிமோனியா பாதிப்பு