×

கணவரை விவாகரத்து செய்தது ஏன்? மனம் திறந்த இஷா கோபிகர்

மும்பை: தமிழ், இந்தி உள்பட ஏராளமான மொழிகளில் நடித்தவர், இஷா கோபிகர். அவர் காதலித்து திருமணம் செய்திருந்த தொழிலதிபர் டிம்மி நரங்கை விவாகரத்து செய்தார். இதுகுறித்து முதல்முறையாக அவர் மனம் திறந்து பேசியிருக்கிறார். இஷா கோபிகர் கூறியிருப்பதாவது: முதலில் எனக்கு பயமாக இருந்தது. மறுபடியும் முதலில் இருந்து எப்படி தொடங்குவது என்று சத்தியமாக எனக்கு தெரியவில்லை. எனது 10 வயது மகளுடன் வீட்டை விட்டு வெளியே வந்தேன். டிம்மி நரங்கின் வீட்டுக்கு அருகிலேயே ஒரு வீடு வாங்கினேன். என் மகள் அவள் தந்தையை மிஸ் பண்ணக்கூடாது என்பதற்காகவே நான் அப்படி செய்தேன். தற்போது மகளுடன் நேரத்தைச் செலவிட, டிம்மி நரங் அடிக்கடி என் வீட்டுக்கு வந்து செல்கிறார்.

இப்போது நாங்கள் கணவன், மனைவி இல்லை. ஆனால், எங்கள் மகளுக்கு பெற்றோர் என்ற விஷயம் எப்போதும் மாறாது. தற்போது நானும், டிம்மி நரங்கும் நண்பர்களாக இருக்கிறோம். ஒருவரிடம் இருந்து மற்றொருவர் எதையும் எதிர்பார்க்காவிட்டால் உறவுகள் மேம்படும் என்று நினைக்கிறேன். திருமண வாழ்க்கையில் எது தவறாக மாறியது என்று தெரியவில்லை. நாங்கள் அப்படியே விலகிச்செல்ல ஆரம்பித்தோம். இது அவரது முடிவு. எங்கள் வாழ்க்கை ஒர்க்அவுட் ஆகவில்லை என்றார். நான், சரி என்றேன். மெச்சூரிட்டியானவர்கள் மட்டுமே இதுபோன்ற ஒரு முடிவை எடுக்க முடியும். ‘வாழு, வாழவிடு’ என்று நினைப்பவள் நான். நான் நினைத்திருந்தால், விவாகரத்து கொடுக்காமல் கூட இருந்திருக்கலாம். ஆனால், அது என் குணம் இல்லை. நாங்கள் இருவரும் கலந்து பேசியே பிரிந்து சென்றோம்.

Tags : Isha Gobikar ,Mumbai ,Timmy Narang ,
× RELATED அதிர்வலை மூலம் மருந்து செலுத்தும்...