×

ஆஸ்கர் போட்டியில் கன்னட படம்

புதுடெல்லி: 2025ஆம் ஆண்டு ஆஸ்கருக்கு கன்னட குறும்படமான ‘Sunflowers Were the First Ones to Know’ லைவ் ஆக்‌ஷன் குறும்படம் என்ற பிரிவில் தகுதி பெற்றுள்ளது. இதனை இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் தங்களது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளது. மாணவர் சித்தானந்தா எஸ் நாயக் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். 15 நிமிடம் ஓடக்கூடிய இந்தப் படம் இந்திய நாட்டுப்புறக் கதைகள் மற்றும் மரபுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது விழா மார்ச் 2ம் தேதி நடைபெறவுள்ளது. விரைவில் இறுதி செய்யப்பட்ட நாமினேஷன் பட்டியலை அறிவிப்பார்கள். இந்த சூழலில் போட்டியில் உள்ளே நுழைந்த கன்னட குறும்படத்துக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags : New Delhi ,Film and Television Company of India ,
× RELATED டிரோன் எதிர்ப்பு வெடிபொருள் தயாரிக்க விண்ணப்பம் வரவேற்பு