×

அமரன் வெற்றி விழாவில் கண்ணீர் சிந்திய சிவகார்த்திகேயன்

சென்னை: கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான படம் ‘அமரன்’. இதன் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன் பேசியது: இந்த படம் 150 கோடி வசூல் பண்ணியிருக்கு, இன்னும் இவ்வளவு வசூல் பண்ணும்னு சொல்றாங்க. எனக்கு வசூல் முக்கியம்தான். அப்போதான் அடுத்தடுத்து பெரிய படங்கள் என்னால மக்களுக்கு கொடுக்க முடியும். எனது அப்பா தாஸ், போலீஸ் அதிகாரி என்பது பலருக்கும் தெரியும். முகுந்த் வரதராஜனின் கேரக்டரை செய்ய அவர்தான் காரணம். சிறைத் துறையில் அப்பாவை பற்றி கேட்டால் சொல்வாங்க. எங்க அப்பா லீவ் எடுத்து நான் பார்த்தது இல்ல. இந்த படத்தை சரியாக பண்ணிடணும்னு நினைச்சதுக்கு காரணம் என்னுடைய தந்தைதான். 21 வருடமாக அவருடைய நினைவுல இருக்கேன். முகுந்த் சாருக்கும் அப்பாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கு. அப்பா இந்த மாதிரி ஊருக்கு வரேன்னு சொன்னாரு.

அடுத்த நாள் நான் காலேஜ் போய்ட்டு வரும்போது வீட்டுல கூட்டமா இருந்துச்சு. அப்பா இறந்திட்டார்னு தெரிஞ்சது. சடங்கு முடிக்கும்போது என்னுடைய அப்பாவோட எலும்பை பார்த்தேன். அங்க உடைஞ்சது அப்பாவோட எலும்பு மட்டும் இல்ல 17 வயசு பையனான என்னுடைய மனசும்தான். இந்த படத்தோட கிளைமேக்ஸ் மாதிரி ஜனாதிபதிகிட்ட எங்க அம்மா மெடல் வாங்கினாங்க. இந்த படத்தின் மூலமாக என்னுடைய அப்பாவை நான் பார்த்துட்டேன். முகுந்த் வரதராஜன் வாழ்க்கைக்கும், என் அப்பாவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. அப்பா எங்கேயும் போகல, இங்கதான் அனைவருடைய கைதட்டல்கள்ல இருக்கார் (பேசியபடி கண்ணீர் சிந்துகிறார்). இவ்வாறு உருக்கமாக சிவகார்த்திகேயன் பேசினார். சாய் பல்லவி, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தயாரிப்பாளர் மகேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

 

Tags : Sivakarthikeyan ,Amaran ,Chennai ,Kamal Haasan ,Rajkamal International ,
× RELATED விஜய் பட டான்ஸ் மாஸ்டரின் புது பாய்ச்சல்