×
Saravana Stores

எனது வெற்றிக்கு அஜித்தான் காரணம்: யுவன் சங்கர் ராஜா புகழாரம்

சென்னை: ‘அரவிந்தன்’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக சினிமாவில் அறிமுகமானார் யுவன் சங்கர் ராஜா. அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், அதை தொடர்ந்து அவர் இசையமைத்த படங்கள் எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை. தொடர்ச்சியாக இவர் இசையமைப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை. தற்போது, இவர் பாடலுக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கும் நிலையில், அவரது வெற்றிக்கு முக்கிய காரணம் நடிகர் அஜித் என்ற தகவலை யுவன் பகிர்ந்துள்ளார்.

அதில், ‘நான் ராசியில்லாத இசையமைப்பாளர் என்றும் என்னால் தான் படங்கள் தோல்வி அடைகிறது என்றும் கூறி என்னை ஒதுக்கிவிட்டார்கள். அப்போது அஜித் என் வீட்டிற்கு வந்து அவர் நடிக்கும் ‘தீனா’ திரைப்படத்தில் நான் தான் இசையமைக்க வேண்டும், என் திறமையை இதன் மூலம் காட்ட வேண்டும் என்றார். அது எனக்கு ஒரு கம் பேக் படமாக அமைந்தது’ என கூறியுள்ளார்.

Tags : Yuvan Shankar Raja ,Chennai ,
× RELATED ஏஐ மூலம் இளமை தோற்றத்துக்கு மாறிய ஜாக்கிசான்