×
Saravana Stores

க.மு. க.பி படத்தை இயக்கும் கல்லூரி பேராசிரியர்

சென்னை: புஷ்பநாதன் ஆறுமுகம் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘க. மு – க. பி’ (கல்யாணத்திற்கு முன் – கல்யாணத்திற்கு பின்). கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிக்கொண்டே இதுவரை 7 குறும்படங்களை இயக்கியுள்ள புஷ்பநாதன் ஆறுமுகம், நித்திலன் இயக்கத்தில் வெளியான ‘மகாராஜா’ மற்றும் ‘கொட்டேஷன் கேங்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

டாணாக்காரன், மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள விக்னேஷ் ரவி கதாநாயகனாக நடிக்கிறார். சரண்யா ரவிச்சந்திரன், டிஎஸ்கே, பிரியதர்ஷினி, கபாலி பெருமாள், அருவி பாலா நடித்துள்ளனர். பிளையிங் எலிபன்ட்ஸ் எண்டர்டைன்மென்ட் சார்பில் படம் உருவாகியுள்ளது. ஒளிப்பதிவை ஜி.எம். சுந்தர் கவனித்துள்ளார். தர்ஷன் ரவிக்குமார் இசையமைத்துள்ளார். சிவராஜ் பரமேஸ்வரன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

Tags : K. M. K. B ,Chennai ,Pushbanathan Arumugam ,Nithilan ,
× RELATED சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள்.. டெண்டர் விட ஐகோர்ட் அனுமதி