×
Saravana Stores

ரொமான்டிக் காமெடி ஜானரில் பிரேக் ஃபாஸ்ட்

சென்னை: ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது ‘பிரேக் ஃபாஸ்ட்’ படம். படத்தின் இயக்குனர் காந்தி கிருஷ்ணா, இதற்கு முன் ‘செல்லமே’, ‘நிலா காலம்’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களை இயக்கியுள்ளார். அவர் கூறியது: பசிக்கு தீனிதான் ‘பிரேக் ஃபாஸ்ட்’. அப்படியொரு தீனி வாழ்க்கைக்கும் தேவைப்படுகிறது. அதனாலேயே இந்த தலைப்பு. போன தலைமுறை, இந்த தலைமுறை இரண்டையும் சேர்க்கும் வகையில் இதன் கதை பின்னப்பட்டுள்ளது. ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தை முழுக்க சென்னையில் படமாக்கியுள்ளேன். ஒரு சில காட்சிகள் கிராமத்திலும் வரும். பாடல்களை வெளிநாட்டில் படமாக்கியுள்ளேன். இதில் புதுமுகங்கள் ராணவ், கிரித்திக் மோஹன் ஹீரோக்கள். ரோசிமின், அமிதா ரங்கராஜன் ஹீரோயின்கள். அர்ச்சனா, சம்பத்ராஜ், ரவிமரியா, இயக்குனர் ரங்கநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசை. வைரமுத்து பாடல்கள். எம்.வி.பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு. பிரேம் கிளாசிக் பிக்சர்ஸ் சார்பில் கிரிஜா வரதராஜ் தயாரித்துள்ளார்.

Tags : Chennai ,Gandhi Krishna ,
× RELATED சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள்.. டெண்டர் விட ஐகோர்ட் அனுமதி