கமல் – அன்பறிவ் படத்தின் படப்பிடிப்பு அறிவிப்பு

சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கமல்ஹாசனின் 237வது திரைப்படமாக உருவாக இருக்கும் இந்தப் படம் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த வீடியோ ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த படத்தின் திரைக்கதை முழுவதுமாக தயாராகி விட்டதாகவும் அடுத்த கட்டமாக நட்சத்திரங்கள் தேர்வு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெறும். இந்த பணிகள் இன்னும் இரண்டு மாதத்தில் முடிவடைந்துவிடும். பிறகு ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கி அதே ஆண்டில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

The post கமல் – அன்பறிவ் படத்தின் படப்பிடிப்பு அறிவிப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: