56 வயது பெண்ணாக நடித்த இனியா

சென்னை: ஜேம்ஸ் கார்த்திக், எம்.நியாஸ் இணைந்து தயாரித்துள்ள படம், ‘சீரன்’. இயக்குனர் ராஜேஷ்.எம் உதவியாளர் துரை கே.முருகன் எழுதி இயக்கியுள்ளார். அரவிந்த் ஜெரால்ட், சசிதரன் இணைந்து பாடல்களுக்கு இசை அமைத்துள்ளனர். பாஸ்கர் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்ய, ஜூபின் பின்னணி இசை அமைத்துள்ளார். சினேகன், கு.கார்த்திக் பாடல்கள் எழுதியுள்ளனர்.

இதில் ஜேம்ஸ் கார்த்திக், இனியா, சோனியா அகர்வால், ‘ஆடுகளம்’ நரேன், ஆஜீத், கிரிஷா குரூப், சென்ராயன், ஆர்யன், அருந்ததி நாயர் நடித்துள்ளனர். உத்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் செ.ஹரி உத்ரா வரும் அக்டோபர் 4ம் தேதி தமிழகம் முழுக்க வெளியிடும் இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலரை ராஜேஷ்.எம் வெளியிட்டார்.

அப்போது இனியா பேசியதாவது: பூங்கோதை என்ற கேரக்டரில் 20 வயது இளம்பெண், 2 குழந்தைகளின் அம்மா, 56 வயது பெண் என்று, 3 வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளேன். உண்மைச் சம்பவம் ஒன்றைப் படமாக்கியுள்ளனர். ஜேம்ஸ் ஜோடியாக நடித்துள்ளேன். சமூகத்துக்கு மிகவும் முக்கியமான சில கருத்துகளைச் சொல்லியிருக்கிறோம். இதில் சோனியா அகர்வால் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இப்படம் எனக்கு திருப்புமுனையாக அமையும் என்று மிகவும் நம்புகிறேன்.

The post 56 வயது பெண்ணாக நடித்த இனியா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: