5 ஆஸ்கர் புகழ் ‘க்ளாடியேட்டர்’ படத்தின் 2ம் பாகம்!

ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் ரஸ்ஸல் க்ரோவ் நடிப்பில் வெளியாகி இன்றளவும் வரலாற்றுத் திரைப்படங்களுக்கும், போர்க்கள காட்சிகளுக்கும் முன்னோடியாக திகழ்ந்து வரும் படம் ‘க்ளாடியேட்டர்’. ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ வெப் தொடர் தொடங்கி நம் ‘பாகுபலி’ வரையிலும் ‘க்ளாடியேட்டர்’ திரைப்படத்தின் தாக்கத்தை உணரலாம்.

2000ஆம் ஆண்டு வெளியான இப்படம் உலகமெங்கும் 400 மில்லியன் டாலர்கள் வசூலித்து சாதனை படைத்தது. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த ஒலி, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் உள்ளிட்ட ஐந்த ஆஸ்கர் விருதுகளையும் குவித்தது. கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்குப் பிறகு ‘கிளாடியேட்டர்’ படத்தின் இரண்டாம் பாகத்தை ரிட்லி ஸ்கார் உருவாக்கியுள்ளார்.

தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. டிரெய்லரின் பிரம்மாண்டமே படம் விஷுவல் விருந்தாக இருக்கும் என்பதை எடுத்துரைக்கிறது. முந்தைய பாகத்தைக் காட்டிலும் ரெட்டிப்பு பிரம்மாண்டம், மெகா பட்ஜெட் என இந்தப் படம் நவம்பர் 15ம் தேதி குளிர்கால சிறப்பாக வெளியாக உள்ளது.

The post 5 ஆஸ்கர் புகழ் ‘க்ளாடியேட்டர்’ படத்தின் 2ம் பாகம்! appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: