தெலுங்கில் அறிமுகமாகிறார் அதிதி ஷங்கர்

சென்னை: தமிழில் கார்த்தி நடித்த ‘விருமன்’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர், அடுத்து சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘மாவீரன்’ என்ற படத்தில் நடித்தார். சில படங்களில் சொந்தக்குரலில் பாடியுள்ள அவர், தற்போது விஷ்ணுவர்தன் இயக்கும் ‘நேசிப்பாயா’ என்ற படத்தில், அதர்வா முரளியின் தம்பி ஆகாஷ் முரளி ஜோடியாக நடித்துள்ளார். இதையடுத்து அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பெல்லம்கொண்டா சாய் சீனிவாஸ் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தின் மூலம் அதிதி ஷங்கர் தெலுங்கில் அறிமுகமாகிறார். விஜய் கனகமெடலா இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த வாரம் ஐதராபாத்தில் தொடங்குகிறது. டாக்டருக்குப் படித்து முடித்திருக்கும் அதிதி ஷங்கர், சினிமாவில் நடிக்க வந்ததால் மேற்கொண்டு படிக்கவில்லை.

 

The post தெலுங்கில் அறிமுகமாகிறார் அதிதி ஷங்கர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: