மலையாளத்தில் நடிக்கிறார் சூர்யா

திருவனந்தபுரம்: ‘ஆர்டிஎக்ஸ்’ என்ற மலையாளப் படத்தின் இயக்குனர் நஹாஸ் ஹிதாயத்தை சூர்யா சந்தித்தார். அப்போது சூர்யா, தனக்கு ‘ஆர்டிஎக்ஸ்’ படம் மிகவும் பிடிக்கும் என்று சொன்னார். இச்சம்பவம் நடந்து முடிவதற்குள், ‘இக்கூட்டணி வெகுவிரைவில் ஒரு படத்தில் இணைகிறது. அதற்கான முதற்கட்ட சந்திப்பு இது’ என்ற தகவல் வெளியாகியுள்ளது. சூர்யாவுக்காக முழுநீள ஆக்‌ஷன் கதையை உருவாக்கியுள்ள நஹாஸ் ஹிதாயத், அதன் ஒன்லைனைச் சொன்னதாக தெரிகிறது. மேலும், இப்படம் பான் இந்தியா முறையில் உருவாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

சூர்யாவை நேரில் சந்தித்துப் பேசியது பற்றி இயக்குனர் நஹாஸ் ஹிதாயத் கூறுகையில், ‘என் அபிமானத்துக்குரிய ஹீரோ சூர்யாவை நேரில் சந்தித்துப் பேசிய சம்பவம், ஒரு கனவு நனவான மாதிரி இருந்தது. அவரது திரைப்பணி எனக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கக்கூடியவை. ‘ஆர்டிஎக்ஸ்’ படத்தைப் பார்த்துவிட்டு அவர் எவ்வளவு ரசித்தார் என்று அவரே என்னிடம் சொன்னதைக் கேட்டது, உண்மையில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டாகவே நினைத்து பெருமிதப்படுகிறேன்’ என்றார். நஹாஸ் இயக்கும் படம் நேரடி மலையாளத்தில் உருவாகி, பான் இந்தியா மொழிகளிலும் வெளியாகும் எனத் தெரிகிறது.

The post மலையாளத்தில் நடிக்கிறார் சூர்யா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: