விடுதலை 2 டிசம்பர் 20ல் ரிலீஸ்

சென்னை: கதையின் நாயகனாக சூரி, முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘விடுதலை’ படத்தின் முதல் பாகம், கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி திரைக்கு வந்து வெற்றிபெற்றது. வெற்றிமாறன் இயக்க, இளையராஜா இசை அமைத்தார். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, எல்ரெட் குமார் தயாரித்தார். இந்நிலையில், ‘விடுதலை’ படத்தின் 2ம் பாகத்துக்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், பவானிஸ்ரீ, பிரகாஷ்ராஜ், போஸ் வெங்கட், சேத்தன், சூர்யா விஜய் சேதுபதி, ராஜீவ் மேனன், கவுதம் வாசுதேவ் மேனன் நடிக்கின்றனர். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசை அமைக்கிறார். வரும் டிசம்பர் 20ம் தேதி படம் திரைக்கு வருகிறது. தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

The post விடுதலை 2 டிசம்பர் 20ல் ரிலீஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: