ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினரால் தீவிரவாதி சுட்டுக் கொலை..!!

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினரால் தீவிரவாதி சுட்டுக் கொலை செய்யப்பட்டார். நேற்றைய தினம் பயங்கரவாதிகள் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் வெளியானதை அடுத்து, பாதுகாப்புப் படையினர் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அப்போது, பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த தொடங்கினர்.

இரவு முழுவதும் இடைவிடாத தீவிரமான துப்பாக்கிச் சண்டை தொடர்ந்தது. எச்சரிக்கையாக இருந்த பாதுகாப்புப் படையினர் தீவிரவாதி ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி சுட்டு கொன்றனர். ஏப்ரல் 22 அன்று கொடிய பஹல்காம் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளில் மூன்று பேர் ‘ஆபரேஷன் மகாதேவ்’ இன் கீழ் ஸ்ரீநகர் அருகே பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த மோதல் நடைபெற்றுள்ளது.

The post ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினரால் தீவிரவாதி சுட்டுக் கொலை..!! appeared first on Dinakaran.

Related Stories: