×

கரூர் தாந்தோணிமலையில் வடிகால்களை தரம் உயர்த்த வேண்டும்

 

கரூர், ஆக. 1: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை வெங்கடேஷ்வரா நகர்ப்பகுதியில் தாழ்வான நிலையில் உள்ள வடிகால்களை தரம் உயர்த்த வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை ராயனு£ர் இடையே வெங்கடேஷ்வரா நகர் பகுதி உள்ளது. நான்கு தெருக்கள் உள்ள இந்த பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன.

இந்த பகுதியில் கடந்த ஐந்தாண்டுக்கும் மேலாக சாக்கடை வடிகால் புதுப்பிக்கப்படாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சாலையின் தன்மையும் சாக்கடை வடிகாலை ஒட்டியே உள்ளது. இதன் காரணமாக மழைக்காலங்களில் பெய்யும் மழை, வடிகாலில் கலந்து கழிவு நீருடன் குடியிருப்புகளுக்குள் புகுந்து பல்வேறு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.

மழைக்காலங்களில் உருவாகும் பெரும்பாலான சீசன் நோய்கள் இந்த பகுதியில் இருந்து உருவாகும் அளவுக்கு நகரின் தன்மை உள்ளது. இந்த பகுதி சாக்கடை வடிகாலை தரம் உயர்த்த வேண்டும் என இந்த பகுதியினர் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு மோசமான நிலையில் உள்ள சாக்கடை வடிகாலை மேம்படுத்த தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கைவைத்துள்ளனர்.

 

The post கரூர் தாந்தோணிமலையில் வடிகால்களை தரம் உயர்த்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Karur Thanthonimalai ,Karur ,Venkateswara Nagar ,Thanthonimalai ,Karur Corporation ,Rayanur ,Dinakaran ,
× RELATED கரூர்- திருச்சி சாலையில் பயன்பாடு இல்லாத நீர்தேக்க தொட்டியால் ஆபத்து