- Kadavur
- Palaniswami
- ஆறுமுகம்
- காளியம்மன் கோவில் தெரு
- பாலவிடுதி, கரூர் மாவட்டம்
- அய்யம்பாளையம் பிரதான சாலை
- பலவிடுதி
கடவூர், ஜன, 9: கரூர் மாவட்டம் பாலவிடுதி கடவூர் காளியம்மன் கோவில் தெரு ஆறுமுகம் மகன் பழனிச்சாமி (37). இவர் அய்யம்பாளையம் மெயின் ரோட்டில் சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்து வந்து உள்ளார். இது குறித்து இப்பகுதியினர் பாலவிடுதி போலீசாருக்கு தகவல் அளித்து உள்ளனர்.
தகவல் அறிந்த பாலவிடுதி போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்து உள்ளனர். அப்போது பழனிச்சாமி விற்பனை செய்வதற்காக மதுபானங்களை வைத்து இருந்ததை கண்டு பிடித்து உள்ளனர். இதனை அடுத்து பதுக்கி வைத்திருந்த மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
