×

குளித்தலை காவிரி பாலத்தில் பைக் மீது கார் மோதி பெண் படுகாயம்

 

குளித்தலை, ஜூலை 31: திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுக்கா நாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (26). இவரின் தந்தை சுப்பிரமணியன், தாயார் உஷாராணி ஆகிய இருவரும் பைக்கில் நேற்று முன்தினம் குளித்தலை காவிரி பாலத்தில் சென்றனர்.

அப்போது எதிரே குளித்தலை பெரியார் நகரை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் ஓட்டி வந்த கார் பைக் மீது மோதியது. இதில் உஷாராணி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார். கார்த்திக்ராஜா அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post குளித்தலை காவிரி பாலத்தில் பைக் மீது கார் மோதி பெண் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Kulithalai Cauvery Bridge ,Kulithalai ,Karthik Raja ,Narayanapuram ,Thottiyam taluka ,Trichy district ,Subramanian ,Usharani ,
× RELATED தாந்தோணி ஒன்றிய பகுதியில் குடும்ப...