×

காற்றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாடு சாதனை: ஒரே நாளில் 113.71 மில்லியன் யூனிட் காற்றாலை மூலம் உற்பத்தி செய்து சாதனை

சென்னை: காற்றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாடு மீண்டும் சாதனை படைத்துள்ளது. ஒரே ஆண்டில் 23வது முறையாக 100 மில்லியன் யூனிட் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் விநியோகம் கழகம் தகவல்படி, ஒரே நாளில் 113.71 மில்லியன் யூனிட் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

நடப்பாண்டில் இதுவரை 23 முறை 100 மில்லியன் யூனிட்டை கடந்து காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான 21 முறை என்ற சாதனையை முறியடித்தது புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 – ஜூலை 25க்குள் 7,150 மில்லியன் யூனிட் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இதே காலகட்டத்தில் கடந்த 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் சரசரியாக தலா 5,500 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு இருந்தது. நடப்பாண்டில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்து காணப்படுவதால் ஆண்டு முடிவில் அதிக மின் உற்பத்தி செய்து புதிய சாதனை படைக்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post காற்றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாடு சாதனை: ஒரே நாளில் 113.71 மில்லியன் யூனிட் காற்றாலை மூலம் உற்பத்தி செய்து சாதனை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Tamil Nadu Electricity Distribution Corporation ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...