- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு கூட்டமைப்பு
- சென்னை
- புதுக்குடி, தஞ்சாவூர்
சென்னை: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடியில் 8 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். தஞ்சாவூர் மாவட்டம், புதுக்குடியில் நபார்டு ஊரக உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் கீழ் 50 கோடி ரூபாய் செலவில் நாளொன்றுக்கு 300 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட கால்நடை தீவன உற்பத்தி ஆலை மற்றம் திருவண்ணாமலை,
கடலூர், கரூர், தர்மபுரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் 2.33 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நுண்ணுயிரியல் ஆய்வுக் கூடங்கள் என மொத்தம் 80.62 கோடி ரூபாய் செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகளை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
