கல்யாண வீட்டு களரி கறி

 

தேவையான பொருட்கள்:

மட்டன் – 1 கிலோ
மஞ்சள் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
சோம்பு தூள் – 1 டேபிள் ஸ்பூன்
சீரகத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
தனியாத்தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
பட்டை – 2
லவங்கம் – 10
ஏலக்காய் – 5
ரம்பை இலை – 4
தயிர் – 4 டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 100 மி.லி.
நெய் – 50 மி. லி.
சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் – 4
மாங்காய் – ஒரு சிறிய துண்டு
வாழைக்காய் – 1
பாதம் & முந்திரி – தலா 10
கறிவேப்பிலை – 4 கொத்து.

செய்முறை:

அடுப்பில் அடி கனமான பாத்திரம் வைத்து தேங்காய் எண்ணெய், நெய் ஊற்றி நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது, தயிர், பச்சை மிளகாய், பட்டை, இலவங்கம், ஏலக்காய் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். கறிவேப்பிலை, ரம்பை இலை சேர்த்து கழுவிய மட்டன் துண்டுகளை சேர்க்கவும். பிறகு உப்பு சேர்த்து மிளகாய் தூள் தனியா தூள் மஞ்சள் தூள் சோம்புத்தூள் சீரகத்தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறவும். அதன் மீது நறுக்கிய பெரிய வெங்காயம் இரண்டு பச்சை மிளகாய் தயிர் கறிவேப்பிலை சேர்த்து ஐந்து நிமிடம் மூடி வைக்கவும். அதன் பிறகு ஒரு முறை கிளறி விட்டு தண்ணீர் சேர்க்கவும். இப்போது பாத்திரத்தை மூடி வைத்து மட்டுமே நன்றாக வேக வைக்கவும். மட்டன் வெந்ததும் அதில் நறுக்கிய வாழைக்காய், சிறிய துண்டு மாங்காய் சேர்த்து பாதாம் முந்திரி அரைத்த விழுதை சேர்த்து கிளறவும்.ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும் சுவையான கல்யாண வீட்டு களரி கறி தயார்.