அதில், மாதத்திற்கு அவர் 25 பைசா சம்பாதித்ததாகவும் ஆண்டு வருமானம் ரூ.3 எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சான்றிதழ் சமூக ஊடகங்களில் வைரலானது. ராம்ஸ்வரூப்பை பலரும் ‘இந்தியாவின் ஏழை மனிதன்’ என குறிப்பிட்டு கமென்ட்களை பதிவு செய்தனர். சான்றிதழ் வைரலானதும் உடனடியாக சுதாரித்த அதிகாரிகள் கடந்த 25ம் தேதி புதிய சான்றிதழை தந்தனர்.
அதில் மாதம் ரூ.2,500 வருமானம் என்றும் ஆண்டு வருமானம் ரூ.30,000 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. எழுத்துப் பிழை தற்போது சரி செய்யப்பட்டு விட்டதாக தாசில்தார் சவுரவ் திவேதி கூறி உள்ளார். இதை கிண்டலடித்துள்ள அம்மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் எக்ஸ் தளத்தில், ‘‘மபி பாஜ முதல்வர் மோகன் யாதவின் ஆட்சியில், இந்தியாவின் மிக ஏழை மனிதனை கண்டுபிடித்தோம். ஆண்டு வருமானம் வெறும் ரூ.3. இது அதிர்ச்சி அளிப்பதாக இல்லையா? இது மக்களை ஏழையாக்கும் திட்டமா?’’ என கேள்வி கேட்டுள்ளது.
The post மபி பாஜ அரசு நிர்வாகத்தின் லட்சணம் இந்தியாவின் ஏழை மனிதன் ஆண்டு வருமானம் 3 ரூபாய்: வருமான சான்றிதழ் வைரல் appeared first on Dinakaran.
