நேற்று தொடங்கிய இந்த மூன்று நாள் முகாம் நாளை நிறைவடைகிறது. இந்த பயிற்சி முகாம் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி கலந்து கொண்டார். அப்போது முகாமில் பேசிய ராகுல்காந்தி, ‘‘தேர்தல் ஆணையமானது பாரபட்சமாக செயல்படுகின்றது. கிரிக்கெட்டில் நீங்கள் மீண்டும் மீண்டும் அவுட் ஆனீர்கள் என்றால் உங்களை நீங்களே சந்தேகிக்க ஆரம்பிக்கலாம். ஆனால் நீங்கள் அவுட் ஆவதற்கு உங்களது தவறு காரணமாக இல்லை என்பதை நீங்கள் உணருவீர்கள். நடுவர் தான் பாரபட்சமாக நடந்து கொள்கிறார்.
குஜராத்தின் முக்கிய தளமான பாஜவை சட்டமன்ற தேர்தலில் தோற்கடிப்பது முக்கியமாகும். தேர்தலில் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு நகர மற்றும் கட்சியின் மாவட்ட தலைவர்களோடு கலந்தாலோசிக்கப்படும். அவர்களின் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படும்.காங்கிரஸ் தொண்டர்களுடன் கட்சி எப்போதும் இருக்கும். பாஜவை அதன் முக்கிய தளமான குஜராத்தில் பாஜவை தோற்கடிக்க முடிந்தால் அந்த கட்சியை அனைத்து இடங்களிலும் தோற்கடிக்க முடியும்.
உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் வேறு சில மாநிலங்களில் பாஜவை தோற்கடிப்பதற்கு கடினமாக உழைக்கவேண்டும். தேசமானது அனைவரும் வந்து பிரார்த்தனை செய்யக்கூடிய ஒரு கோயில் போன்றது. ஆனால் பிரசாதம் யார் பெறுகிறார்கள் என்பதை பாஜ-ஆர்எஸ்எஸ் கட்டுப்படுத்துகிறது. ஒரு எஸ்சி, எஸ்டி அல்லது ஓபிசி வந்தால் என்ன கொடுக்க வேண்டும் என்பதையும், அதானி அல்லது அம்பானி வந்தால் என்ன கொடுக்க வேண்டும் என்பதையும் அவர்கள் (பாஜக-ஆர்எஸ்எஸ்) தான் முடிவு செய்கிறார்கள்’’ என்றார்.
The post தேர்தல் ஆணையம் பாரபட்சமான நடுவர்: ராகுல்காந்தி விமர்சனம் appeared first on Dinakaran.
