இது குறித்து அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ‘‘மாணவர்களின் பாதுகாப்பு, நல்வாழ்வை உறுதி செய்ய அனைத்து மாநிலங்களும் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு குறியீட்டின்படி, பள்ளிகள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அவசரகால தயார்நிலை பயிற்சி அளித்தல் உள்ளிட்டவை கட்டாயம் தணிக்கை செய்யப்பட வேண்டும்.
தீ பாதுகாப்பு, அவசரகால வெளியேற்றங்கள் மற்றும் மின் வயரிங் ஆகியவற்றுடன் பள்ளி கட்டிடங்களின் கட்டமைப்பு முழுமையாக மதிப்பிடப்பட வேண்டும். முதலுதவி மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் உள்ளிட்ட அவசரகால தயார்நிலை குறித்து ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் பயிற்சி பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டும். தீயணைப்பு துறை, காவல்துறை மற்றும் மருத்துவமனைகளுடன் இணைந்து பயிற்சி அமர்வுகள் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.
The post நாடு முழுவதும் பள்ளிகளில் பாதுகாப்பு தணிக்கை கட்டாயம்: ஒன்றிய அரசு உத்தரவு appeared first on Dinakaran.
