124.80 அடி உயரம் கொண்ட அணையில் நேற்று 123.80 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 30,000 கனஅடி திறக்கப்பட்டுள்ளது. திறக்கும் நீரின் அளவு 50 ஆயிரம் கனஅடியாக உயர வாய்ப்புள்ளதால், நதியோரம் வாழும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி காவிரி நீர்பாசன கழகம் அறிவித்துள்ளது.
கேரள மாநிலம், வயநாட்டில் பெய்துவரும் மழை காரணமாக மைசூரு மாவட்டம், எச்.டி.கோட்டை தாலுகா பீசனஹள்ளி கிராமத்தில் உள்ள கபினி அணை வேகமாக நிரம்பி வருகிறது. வினாடிக்கு 21,700 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 51 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
The post காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 51 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு appeared first on Dinakaran.
