இங்கிலாந்துடன் வர்த்தக ஒப்பந்தம் கடல் உணவுத்தொழில் 70% வளர்ச்சி அடையும்: ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: ஒன்றிய மீன்வள அமைச்சகம் நேற்று வௌியிட்ட அறிவிப்பில், “இந்தியா – இங்கிலாந்துடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதால் இருநாடுகளின் உறவில் ஒரு குறிப்பிட்ட மைல் கல் எட்டப்பட்டுள்ளது. கடல் துறையை பொறுத்தவரை இந்த ஒப்பந்தம் பல்வேறு வகையான கடல் உணவு பொருள்கள் மீதான இறக்குமதி வரியை குறைக்கிறது. இந்திய கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் இங்கிலாந்து சந்தையில் வியட்நாம், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுடன் போட்டியிட தயாராக உள்ளனர்.

2024-25ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த கடல் உணவு ஏற்றுமதி ரூ.60,523 கோடியை எட்டியது. தற்போது இந்தியா இங்கிலாந்து ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதால், வரும் ஆண்டுகளில் இங்கிலாந்துக்கான கடல்சார் ஏற்றுமதியில் 70- சதவீத வளர்ச்சியை காண முடியும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இங்கிலாந்துடன் வர்த்தக ஒப்பந்தம் கடல் உணவுத்தொழில் 70% வளர்ச்சி அடையும்: ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: