ராமதாசுக்கு 87வது பிறந்த நாள் : பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி வாழ்த்து

திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், தலைவர் ராமதாசின் 87வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவருக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் ராமதாஸ் நன்றி தெரிவித்ததோடு, தனது பிறந்தநாள் செய்தியாக ஒரு சொட்டு மதுவில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். பிறந்த நாளை முன்னிட்டு, திண்டிவனம் அருகே கோனேரிக்குப்பத்தில் செயல்பட்டு வரும் சரஸ்வதி கலைக்கல்லூரியில் ராமதாஸ் பங்கேற்று 87 மரக்கன்றுகளை நடும் பணியை துவக்கி வைத்தார்.

The post ராமதாசுக்கு 87வது பிறந்த நாள் : பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: