டிஆர்டிஓ ஏற்கனவே டிரோன்களைப் பயன்படுத்தி ஏவக்கூடிய பல்வேறு ஆயுதங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தியுள்ளது. ஏரோ இந்தியா-2025 நிகழ்ச்சியில் இது தொடர்பான பல அம்சங்களைக் காட்சிப்படுத்தியது. அதேபோல், டிரோன்கள் மற்றும் பிற தளங்களில் இருந்து ஏவப்படும் யுஎல்பிஜிஎம்மை டிஆர்டிஓ உருவாக்கி வருகிறது. இந்த இலகுரக ஏவுகணை அதிக துல்லியத்துடன் நீண்ட தூர இலக்குகளை அழிக்க உருவாக்கப்பட்டு வருகிறது. லேசர் அடிப்படையிலான ஆயுதங்களும் கர்னூலில் சமீபத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளன. எதிரிகளின் தாக்குதல்கள், கண்காணிப்பு மற்றும் எதிர் தாக்குதல்களைத் தடுக்க டிஆர்டிஓ பல டிரோன்களை உருவாக்கி வருகிறது.
ரூ.2000 கோடியில் ரேடார்கள்;
ராணுவத்திற்கு வான்வெளி பாதுகாப்புக்கான ரேடார்களை ரூ.2000 கோடிக்கு வாங்குவதற்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்(பிஇஎல்) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் நேற்று அறிவித்தது.
The post ஆந்திர மாநிலம், கர்னூலில் டிரோன் மூலம் ஏவப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி appeared first on Dinakaran.
