ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கிட்டத்தட்ட ஏழு லட்சம் வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. சுமார் 1.2 லட்சம் வாக்காளர்களின் கணக்கெடுப்பு படிவங்கள் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பீகார் வாக்காளர்களில் 99.8 சதவீதத்தினர் இதுவரை தங்கள் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியிடப்படும் வரைவுப் பட்டியலில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அவற்றை சரிசெய்யும் வகையில் ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 1 வரை அவகாசம் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
The post பீகாரில் சிறப்பு தீவிர திருத்தம் நிறைவு: 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்: தேர்தல் ஆணையம் தகவல் appeared first on Dinakaran.
