காங். ஆளும் மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு -ராகுல்காந்தி

டெல்லி: காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என டெல்லியில் நடந்த பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிற்படுத்தப்பட்டோர் பிரச்சனை முன்பே அறியாமல் இருந்தது காங்கிரசின் தவறுதான். பிற்படுத்தப்பட்டோர் பிரச்சனையை உணராமல் போனது காங்கிரஸும் தானும் செய்த தவறு. பிற்படுத்தப்பட்டோர் பிரச்சனை நீரு பூத்த நெருப்பாக மறைந்து இருக்கிறது. பிற்படுத்தப்பட்டோர் பிரச்சனையை முன்பே அறிந்திருந்தால் காங். ஆட்சியில் ஜாதிவாரி கணகெடுப்பு நடத்தியிருப்போம். பிற்படுத்தப்பட்டோரின் வரலாறை நான் படிக்காமல் போனதற்கு வருந்துகிறேன். தெலுங்கானாவில் காங். அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது அரசியல் பூகம்பத்தை ஏற்படுத்தியது. தெலுங்கானா ஜாதிவாரி கணக்கெடுப்பு இந்தியா முழுவதும் அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஜாதிவாரி கணக்கெடுப்பின் பின்னதிர்வை உணர்ந்திருக்க மாட்டீர்கள்; அதற்கான பணி நடந்துவிட்டது என்று கூறினார்.

 

The post காங். ஆளும் மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு -ராகுல்காந்தி appeared first on Dinakaran.

Related Stories: